Syndicate content

May 2018

இலங்கையின் தோட்ட பகுதிகளில் கல்வி மற்றும் ஆரம்பகால சிறுபராய பராமரிப்பை மேம்படுத்தல்

Shalika Subasinghe's picture
Also available in: English | සිංහල
இலங்கையில் தோட்டத் தொழிற்துறையானது தேயிலை,றப்பர் அல்லது தெங்குத் தோட்டங்களை உள்ளடக்கியதாகவும், அரசாங்கத்தாலோ, பிராந்திய தோட்ட நிறுவனங்களாலோ, தனி நபர்களாலோ, குடும்பங்களாலோ நிர்வாகிக்கப்படுவதாகவோ, சொந்தமானதாகவோ இருக்கின்றன.
 
இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமான மக்கள் பெருந்தோட்டங்களில் வாழ்கின்றனர்.  கடந்த தசாப்தத்தில் இலங்கையில், வறுமை விகிதம் கணிசமானளவு முன்னேறியிருந்தாலும் கூட, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் மிகவும் வறிய சூழ்நிலையிலேயே வாழ்கின்றனர்.
 
ஹட்டன், மத்திய பிரிவின் மவுண்ட் வெர்னன் தோட்டத்தில், ஒரு பழைய சிறுவர் அபிவிருத்தி மையம் (CDC) ஒன்று வீதிக்கு மிக அருகுமியில், சிறுவருக்கு அங்கிங்கே அசைவதற்கும் இடமில்லாதளவு மிகச்சிறிய இடவசதியோடு காணப்படுகிறது.
 
மிக அண்மைக்காலம் வரை மிக மோசமான நிலையில் வசதிகளற்றுக் காணப்பட்டது. அண்மையில் உலக வங்கியால் நிதி வழங்கப்படும் இலங்கை இளம் பராயத்து சிறுவர் அபிவிருத்தித் திட்டத்தின் நிதியுதவியில் மூலமாக புதிய இடவசதியுடன் கூடிய CDC யைக் கட்டியெழுப்பும் வரை இந்நிலை தான் காணப்பட்டது.
 
மவுண்ட் வெர்னன் தோட்ட, மத்திய பிரிவின் ,  பிரைட்டன் முன்பள்ளி சிறுவர்கள் திறப்பு விழா நாளின்போது அனைவரையும் வரவேற்கத் தயாராகிறார்கள். படப்பிடிப்பு:  ஷாலிகா சுபசிங்க 

நிர்மாணப் பணியானது பூர்த்திசெய்யப்பட்டு 2017 ஒக்டோபரில் சமூகத்திடம் கையளிக்கப்பட்டது.
 
கிட்டத்தட்ட 20 சிறுவர்கள் தினமும்  சிறுவர் அபிவிருத்தி மையத்துக்கு சமூகம் தருகின்றனர்.
 
சிறுவர் அபிவிருத்தி அதிகாரியான கமல தர்ஷினி, சிறுவருக்கு புத்தம்புதிய இடமொன்று புதிய தளபாடங்கள், விளையாட்டுப் பொருட்களுடன் கிடைத்ததில் திருப்தியுற்றுள்ளார். அந்தச் சிறுவர்கள் வெவ்வேறு நிறங்களில் விருப்பம் கொண்டவர்களாகவும் சிறுவர் மையத்துக்கு தினந்தோறும் வருவதற்கு ஆர்வமுடையவர்களாக இருப்பதாகவும் அவர் உணர்கிறார்.
 
அந்த சிறுவர்களில் ஒருவரின் உறவினரான S.ராஜேஸ்வரி "புதிய சிறுவர் மையமானது பல மாற்றங்களைக் கொண்டுள்ளது.காற்றோட்டமானது. குழந்தைகள் விளையாடுவதற்கு இடவசதியும் உள்ளது. நீர் மற்றும் மின்சார வசதியும் உள்ளது" என்று குறிப்பிடுகிறார்.

இரண்டு வயதான தக்க்ஷிதாவின் தயாரான M.கௌரி "அங்கே சிறுவர்க்கான இரண்டு நவீன மலசல கூடக் கிண்ணக் கழிப்பறைகள் உள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. எனது மகன் அங்கேஇயற்கை உபாதைகளைத் தீர்த்துக்கொள்ள விரும்புகிறார்"என்றார். அத்துடன் "வெளியேயுள்ள விளையாடும் பகுதி வேலியினால் அடைக்கப்பட்டுள்ளது.தக்ஷிதா பாதுகாப்பாக இருப்பார் என்பது மகிழ்ச்சியைத் தருவதோடு அவர் அருகேயுள்ள தேயிலைச் செடிப் பற்றைகளுக்குள் தொலைந்துவிட மாட்டார் என்பதில் மகிழ்ச்சி" என்று மேலும் தெரிவித்தார்.
 
சிறுகுழந்தைகள் அறையானது பாலூட்டுவதற்குத் தனியான இடத்தைக் கொண்டுள்ளதுடன், பால் மா கொடுப்பதை விட தாய்ப்பால் கொடுப்பதே சிறப்பானது என்பதை பிரசாரப்படுத்தும் இரு பெரிய சுவரொட்டிகள் தமிழிலும் சிங்களத்திலும் காணப்படுகின்றன.
 
கமலா 2010இல் தன்னுடைய சிறுவர் அபிவிருத்தி டிப்ளோமாவைப் பெற்றதுடன் இன்னொரு புதிய கற்கை நெறியை இவ்வருடம் தொடரவுள்ளார்.
 உதவி சிறுவர் அபிவிருத்தி அலுவலராகவுள்ள யமுனா பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி அறக்கட்டளை (PHDT) யால் நடத்தப்படும் சிறுவர் அபிவிருத்தி டிப்ளோமா நெறியைத் தொடர்கிறார்.