இலங்கை மகளிர் முன்வர தயங்க வேண்டுமா?

நான் பணிபுரியும் நிறுவனத்தில் பணியில் அக்கறையற்ற நபர்களிற்கு இடமில்லை என்ற கடுமையானகொள்கையை பின்பற்றுகின்றோம் .தங்கள் சக பணியாளர்களை வம்பிற்கு இழுக்கும் கேலி செய்யும் நபர்களிற்கு இடமில்லை என்பதே இதன் அர்த்தம்.எங்கள் பணியாளர்கள் ஏனையவர்களின் தனிப்பட்ட விடயங்களிற்குள் தலையிடுவதில்லை. அழைப்பில்லாத தனிப்பட்ட தொடர்புகளை ஏற்படுத்துவதில்லை.இலங்கையில் பெண்கள் அவர்கள் பணியிடங்களில் துன்புறுத்தல்களை எதிர்கொள்வது வழமையான விடயமாக காணப்படுகின்றது.ஆனால் இது போன்ற கொள்கைகள் ஒரு பாலினத்திற்கு மாத்திரம் சார்பாக காணப்படுவது இல்லை.ஆண்கள் இதன் நன்மையை அனுபவிக்கின்றனர்.
துரதிஸ்டவசமாக எனது நிறுவனத்தின் கொள்கை என்பது விதிமுறை என்பதை விட தனித்துவமானது.சமீபத்தில் பெண் பொறியியலாளர்களை சந்தித்து அவர்களின் அனுபவங்களை கேட்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.ஒருவர் களப்பணிகளிற்கு செல்வது எவ்வளவு கடினமானதாக காணப்படுகின்றது என தெரிவித்தார். தனது ஆண் சக தொழிலாளர்கள் தன்னை மதிக்க விரும்பாததாலும் தனது வழிகாட்டுதல்களை செவிமடுக்க விரும்பாததாலுமே இந்த நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்தார். ஏனைய பெண்களிற்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது,

அவர்களுக்கு அவர்களது ஆண்சகாக்களை விட குறைவாகவே ஊதியம் வழங்குகின்றனர் அவர்கள் பாலியல்ரீதியிலான துன்புறுத்தல்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.