இலங்கையின் தோட்ட பகுதிகளில் கல்வி மற்றும் ஆரம்பகால சிறுபராய பராமரிப்பை மேம்படுத்தல்

This page in:

இலங்கையில் தோட்டத் தொழிற்துறையானது தேயிலை,றப்பர் அல்லது தெங்குத் தோட்டங்களை உள்ளடக்கியதாகவும், அரசாங்கத்தாலோ, பிராந்திய தோட்ட நிறுவனங்களாலோ, தனி நபர்களாலோ, குடும்பங்களாலோ நிர்வாகிக்கப்படுவதாகவோ, சொந்தமானதாகவோ இருக்கின்றன.
 
இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமான மக்கள் பெருந்தோட்டங்களில் வாழ்கின்றனர்.  கடந்த தசாப்தத்தில் இலங்கையில், வறுமை விகிதம் கணிசமானளவு முன்னேறியிருந்தாலும் கூட, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் மிகவும் வறிய சூழ்நிலையிலேயே வாழ்கின்றனர்.
 
ஹட்டன், மத்திய பிரிவின் மவுண்ட் வெர்னன் தோட்டத்தில், ஒரு பழைய சிறுவர் அபிவிருத்தி மையம் (CDC) ஒன்று வீதிக்கு மிக அருகுமியில், சிறுவருக்கு அங்கிங்கே அசைவதற்கும் இடமில்லாதளவு மிகச்சிறிய இடவசதியோடு காணப்படுகிறது.
 
மிக அண்மைக்காலம் வரை மிக மோசமான நிலையில் வசதிகளற்றுக் காணப்பட்டது. அண்மையில் உலக வங்கியால் நிதி வழங்கப்படும் இலங்கை இளம் பராயத்து சிறுவர் அபிவிருத்தித் திட்டத்தின் நிதியுதவியில் மூலமாக புதிய இடவசதியுடன் கூடிய CDC யைக் கட்டியெழுப்பும் வரை இந்நிலை தான் காணப்பட்டது.
 

Lka-earlychildhood
மவுண்ட் வெர்னன் தோட்ட, மத்திய பிரிவின் ,  பிரைட்டன் முன்பள்ளி சிறுவர்கள் திறப்பு விழா நாளின்போது அனைவரையும் வரவேற்கத் தயாராகிறார்கள். படப்பிடிப்பு:  ஷாலிகா சுபசிங்க 

நிர்மாணப் பணியானது பூர்த்திசெய்யப்பட்டு 2017 ஒக்டோபரில் சமூகத்திடம் கையளிக்கப்பட்டது.
 
கிட்டத்தட்ட 20 சிறுவர்கள் தினமும்  சிறுவர் அபிவிருத்தி மையத்துக்கு சமூகம் தருகின்றனர்.
 
சிறுவர் அபிவிருத்தி அதிகாரியான கமல தர்ஷினி, சிறுவருக்கு புத்தம்புதிய இடமொன்று புதிய தளபாடங்கள், விளையாட்டுப் பொருட்களுடன் கிடைத்ததில் திருப்தியுற்றுள்ளார். அந்தச் சிறுவர்கள் வெவ்வேறு நிறங்களில் விருப்பம் கொண்டவர்களாகவும் சிறுவர் மையத்துக்கு தினந்தோறும் வருவதற்கு ஆர்வமுடையவர்களாக இருப்பதாகவும் அவர் உணர்கிறார்.
 
அந்த சிறுவர்களில் ஒருவரின் உறவினரான S.ராஜேஸ்வரி "புதிய சிறுவர் மையமானது பல மாற்றங்களைக் கொண்டுள்ளது.காற்றோட்டமானது. குழந்தைகள் விளையாடுவதற்கு இடவசதியும் உள்ளது. நீர் மற்றும் மின்சார வசதியும் உள்ளது" என்று குறிப்பிடுகிறார்.

இரண்டு வயதான தக்க்ஷிதாவின் தயாரான M.கௌரி "அங்கே சிறுவர்க்கான இரண்டு நவீன மலசல கூடக் கிண்ணக் கழிப்பறைகள் உள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. எனது மகன் அங்கேஇயற்கை உபாதைகளைத் தீர்த்துக்கொள்ள விரும்புகிறார்"என்றார். அத்துடன் "வெளியேயுள்ள விளையாடும் பகுதி வேலியினால் அடைக்கப்பட்டுள்ளது.தக்ஷிதா பாதுகாப்பாக இருப்பார் என்பது மகிழ்ச்சியைத் தருவதோடு அவர் அருகேயுள்ள தேயிலைச் செடிப் பற்றைகளுக்குள் தொலைந்துவிட மாட்டார் என்பதில் மகிழ்ச்சி" என்று மேலும் தெரிவித்தார்.
 
சிறுகுழந்தைகள் அறையானது பாலூட்டுவதற்குத் தனியான இடத்தைக் கொண்டுள்ளதுடன், பால் மா கொடுப்பதை விட தாய்ப்பால் கொடுப்பதே சிறப்பானது என்பதை பிரசாரப்படுத்தும் இரு பெரிய சுவரொட்டிகள் தமிழிலும் சிங்களத்திலும் காணப்படுகின்றன.
 
கமலா 2010இல் தன்னுடைய சிறுவர் அபிவிருத்தி டிப்ளோமாவைப் பெற்றதுடன் இன்னொரு புதிய கற்கை நெறியை இவ்வருடம் தொடரவுள்ளார்.
 உதவி சிறுவர் அபிவிருத்தி அலுவலராகவுள்ள யமுனா பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி அறக்கட்டளை (PHDT) யால் நடத்தப்படும் சிறுவர் அபிவிருத்தி டிப்ளோமா நெறியைத் தொடர்கிறார்.

இந்தப்பாட நெறியானது சிறுவர்களை மேலும் புரிந்துகொள்ளவும், அவர்களது கற்றலைத் தூண்டுவதற்கான புதிய செயன்முறைகளைக் கன்றையவும் அவருக்கு உதவியுள்ளது.
 
இந்த செயற்திட்டமானது குழந்தைகளின் தகுந்த வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் எவ்வாறு உதவுவது என்று பெற்றோருக்குக் கற்றுத்தரும் பெற்றோருக்கான விழிப்புணர்ச்சி வகுப்புக்களுக்கும் அனுசரணை வழங்குகிறது.
 
​பெற்றோரின் செயற்குழுவானது 12 செயற்பாட்டு அங்கத்தவரை, அத்தனை பேரும் தொழில்புரிவோர் இப்போது கொண்டுள்ளது. இவர்கள் வாரத்தில் ஒரு தடவை சந்தித்து சிறுவர் மையம் தொடர்பான விவகாரங்களைப் பற்றிக் கலந்துரையாடி முடிவெடுக்கின்றனர்.​ எல்லாப் பெற்றோரும் இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை சந்தித்து மாணவர் வரவு, ஊட்டச்சத்துக்கள், ஏனைய விசேட தேவைகள் பற்றிக் கலந்துரையாடுகின்றனர். 
 
 

Image
மவுண்ட் வெர்னன் தோட்ட, மத்திய பிரிவின் ,  பிரைட்டன் முன்பள்ளியின் சிறுவர் அபிவிருத்தி அலுவலர் இயற்கையிலிருந்து பெறப்பட்ட பூக்கள் மற்றும் இதர பொருட்களைக் கொண்டு சிறுவர்களுக்கு கற்றல் செயற்பாடு ஒன்றை நடத்துகிறார்.  படப்பிடிப்பு:  ஷாலிகா சுபசிங்க 

இந்தப் பெற்றோர் செயற்குழுவானது 200 ரூபாய்க்கு வீதம் (கிட்டத்தட்ட 1.30$) சேர்த்து நிதியையும் பேணுகிறது. சேர்க்கப்படுன்ற இந்தப் பணம் பெற்றோரினால் நியமிக்கப்பட்ட பொருளாளர் ஒருவர் மூலமாகப் பேணப்பட்டு குழந்தைகளுக்கு உணவு வழங்கப் பயன்படுகிறது.​ குழந்தைகளுக்கு உணவு தயாரிக்க பெற்றோர் சமையலறையில் சேவை நோக்கோடு உதவுகின்றனர்.
 
உலகின் சராசரியளவை விட இலங்கை இளம் பராய சிறுவர் கல்விக்கு மிகக் குறைவாகவே செலவிடுகிறது 
 
2014இல் வெளியிடப்பட்ட உலக வங்கியின் அறிக்கையொன்று, இலங்கையின் பொருளாதாரத்தில் கல்விக்காக செலவிடும் பொதுத் தொகையானது தெற்காசியாவிலேயே மிகக் குறைவானது என்பதோடு, உலகின் சராசரியளவை விட இலங்கை இளம் பராய சிறுவர் கல்விக்கு 
(ECE) மிகக் குறைவாகவே செலவிடுகிறது என்பதையும் குறிப்பிட்டுக் காட்டியது. 
 
​ஏறத்தாழ, 60 வீதமான முன்பள்ளிகள் தனியார் துறையினராலும், 24 வீதமானவை மற்ற அமைப்புக்கள் மற்றும் சமயக் குழுக்களாலுமே நடத்தப்படுகின்றன.​
 
​வருமானம் மற்றும் அமைவிடங்கள் ஆகியன இந்த இளம் சிறுவர் பராய கல்வி சேவைகளை தீர்மானிப்பதில் முக்கியகாரணிகளாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன.​
 
நாட்டின் சனத்தொகையில் மிக வறுமையான 20 வீதக் குடும்பங்களின் குழந்தைகளை விட, 20 வீதமான மிக செல்வந்தக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு   முன் பள்ளிகளில் சேர்ந்துகொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் 17 வீதத்தினால் அதிகமாகவுள்ளது.

கிராமிய மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளை விட நகர்ப்புறப் பகுதிகளில் முன்பள்ளி சேர்க்கை விகிதங்கள் 10 வீதம் அதிகமாகவுள்ளது.
 
குழந்தைப் பராயப் பராமரிப்பு மற்றும் கல்விக்கான வசதிகளை முன்னேற்றுவதற்கான வழிகள் 
 
​ உலக வங்கியால் நிதி வழங்கப்படும் இலங்கை இளம் பராயத்து சிறுவர் அபிவிருத்தித் திட்டத்தின் நிதியுதவியினூடாக  குழந்தைப் பராயப் பராமரிப்பு மற்றும் கல்வி ஆகியவற்றை முன்னேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதாக இலங்கை அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
 
​இந்த செயற்திட்டமானது 2021 நடுப்பகுதி வரை செயற்படும். மகளிர் சிறுவர் விவகார அமைச்சின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கு இது, அனைத்து சிறுவர் அபிவிருத்தி ​மையங்களுக்கும் ஆதரவளிப்பதுடன் வறியோருக்கும், பின் தங்கிய மற்றும் வசதிகளற்ற பிரதேசங்களில் உள்ளோருக்கும் முன்னுரிமை வழங்கும்.

​பெருந்தோட்டங்களாக இருந்தாலும் நாட்டின் ஏனைய பகுதிகளாக இருந்தாலும் இத்தேவைகள் மிக முக்கியமானவை.

மவுண்ட் வெர்னன் தோட்ட சிறுவர் அபிவிருத்தி மையத்தில் ​வேலை செய்யும் ஊழியர்களுக்கு இந்த செயற்திட்டமானது குழந்தைப் பராமரிப்பு மற்றும் அபிவிருத்திக்கான சிறந்த வசதிகளை வழங்கும் நம்பிக்கையை அளித்துள்ளது.

எல்லாக் குழந்தைகளும் தொடர்ந்தும் இங்கே வருவார்கள் என்பதிலும் அதன் மூலம் முன் பள்ளிகளில் சேர்ந்துகொள்வார்கள் என்பதையும் அவர்கள் மிக நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறார்கள்.
 
 


Authors

Shalika Subasinghe

Consultant, Education Global Practice, World Bank Group

Join the Conversation

The content of this field is kept private and will not be shown publicly
Remaining characters: 1000