இலங்கை மகளிர் முன்வர தயங்க வேண்டுமா?

This page in:
Women-dont-ever-have-to-take-a-back-seat-to-men-a-sri-lankan-perspective
இலங்கையில் பெண்கள்  அவர்கள் பணியிடங்களில் துன்புறுத்தல்களை எதிர்கொள்வது வழமையான விடயமாக காணப்படுகின்றது.

நான் பணிபுரியும் நிறுவனத்தில் பணியில் அக்கறையற்ற நபர்களிற்கு  இடமில்லை என்ற கடுமையானகொள்கையை பின்பற்றுகின்றோம் .தங்கள் சக பணியாளர்களை வம்பிற்கு இழுக்கும் கேலி செய்யும் நபர்களிற்கு இடமில்லை என்பதே இதன் அர்த்தம்.எங்கள் பணியாளர்கள் ஏனையவர்களின் தனிப்பட்ட விடயங்களிற்குள் தலையிடுவதில்லை. அழைப்பில்லாத தனிப்பட்ட தொடர்புகளை ஏற்படுத்துவதில்லை.இலங்கையில் பெண்கள்  அவர்கள் பணியிடங்களில் துன்புறுத்தல்களை எதிர்கொள்வது வழமையான விடயமாக காணப்படுகின்றது.ஆனால் இது போன்ற கொள்கைகள் ஒரு பாலினத்திற்கு மாத்திரம் சார்பாக காணப்படுவது இல்லை.ஆண்கள் இதன் நன்மையை அனுபவிக்கின்றனர்.

துரதிஸ்டவசமாக எனது நிறுவனத்தின் கொள்கை என்பது விதிமுறை என்பதை விட தனித்துவமானது.சமீபத்தில் பெண் பொறியியலாளர்களை சந்தித்து அவர்களின் அனுபவங்களை கேட்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.ஒருவர் களப்பணிகளிற்கு செல்வது எவ்வளவு கடினமானதாக காணப்படுகின்றது என தெரிவித்தார். தனது ஆண் சக தொழிலாளர்கள் தன்னை மதிக்க விரும்பாததாலும் தனது வழிகாட்டுதல்களை செவிமடுக்க விரும்பாததாலுமே இந்த நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்தார். ஏனைய பெண்களிற்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது, 
 

Sheshika Fernando addressing the gathering at an international conference
நான் சர்வதேச தொழில்நுட்ப மாநாடுகளில் அடிக்கடி எனது நிறுவனத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றேன்.

 

அவர்களுக்கு அவர்களது ஆண்சகாக்களை விட குறைவாகவே ஊதியம் வழங்குகின்றனர் அவர்கள் பாலியல்ரீதியிலான துன்புறுத்தல்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.

சிலவேளைகளில் இதனை  நுட்பமான விடயமாக அது காணப்படுகின்றது.நான் பணியாற்றி ஒவ்வொரு நிறுவனத்திலும் பெண்கள் சிறுபான்மையினராக காணப்பட்டுள்ளனர்.அவர்களிடம் ஆண்சகாக்கள் போன்று ஆர்வம் காணப்படாததை காணமுடிந்தது மேலும் அவர்களால் பழக முடியாத நிலையும் காணப்படும்.ஆண்களின் வழக்குமொழியில் உரையாடுவது குறித்து அனைவரும் இலகுவாக உணர்வதில்லை.அவ்வாறான சமூக சூழலில் தொழில்குறித்து ஆராயப்படும்போது பெண்கள் தங்கள் கருத்துக்களை முன்வைப்பதற்கான வாய்ப்பை இழக்கின்றனர்.ஒவ்வொரு முறையும் இது இடம்பெறும்போது அது நிறுவனத்திற்கும் நாட்டிற்கும் பாதிப்பான விடயமாக காணப்படுகி;ன்றது.

இதற்கு எதிர்மாறான விடயங்கள் இடம்பெறும்போது-அனைவரினது பங்களிப்பையும் முக்கியமானதாக கருதி அனைவரையும் நாம் மதிக்கும்போது- கௌரவத்துடன் நடத்தும்போது நாங்கள் அதற்கான நன்மைகளை அனுபவிக்கின்றோம்.

 உதாரணத்திற்கு சர்வதேச வங்கிகள் மற்றும் நிதியமைப்புகளிற்கு நிதி தொடர்பான தீர்வுகளை வெற்றிகரமாக உருவாக்கி வழங்குவதற்காக பல செயல்பாட்டு குழுக்களை கையாள்வது என பணிகளில் ஒன்று.எங்கள் அணி அதிகளவிற்கு பல்வகைப்பட்டதாக காணப்படும்போது எங்கள் உற்பத்தியின் தரம் சிறப்பாக காணப்படுவதை நாம் பார்த்திருக்கின்றோம்.இரு பால்களையும் சேர்ந்தவர்கள்- வேறு இனங்கள் மற்றும் சமூகபின்னணிகளை கொண்டவர்கள் உள்ளனர் என்பதே இதன் அர்த்தம்.

தற்செயலாக எனது அணியில் பல பெண்கள் உள்ளனர்- அவர்கள் ஆண் ;சகாக்களை  விட பிரச்சினைகளை வேறு விதத்தில் அணுகுகின்றனர் என்பது தெளிவாக தெரிகின்ற விடயமாக உள்ளது.இணைந்து பணியாற்றி அவர்கள் தனித்துவம் வாய்ந்த தீர்வுகளையும் பயன்படுத்துவதற்கு இலகுவான உற்பத்திகளையும் உருவாக்கியுள்ளனர்.

நாங்கள் அதிகளவிற்கு பல்வேறுபட்டதாக மாறிவருகின்ற சந்தைகளை கவரமுயல்வதால்  பல்வேறுபட்ட கருத்துக்கள் நோக்குகள் உள்ளது சிறந்த விடயம்,இதன் காரணமாகவே நாங்கள் உடற்பயிற்சி கூடத்தை மாத்திரமல்லாமல் மழலைகள் காப்பகத்தையும் கொண்டிருக்கின்றோம்.இதன் காரணமாகவே நாங்கள் பாலியல் துன்புறுத்தல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்ற பயிற்சியையும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகளையும் நாங்கள் தொடர்ச்சியாக நடத்திவருகின்றோம்.உண்மையிலேயே பாதுகாப்பான ஆதரவான தொழில்புரியும் சூழலை நாங்கள் வழங்குகின்றோம் என்பது தெரியவந்துள்ளதால் எங்களால் திறமைவாய்ந்த அனுபவம் வாய்ந்த பணியாளர்களை  கவரமுடிகின்றது.பல்வகைத்தன்மைக்கு ஆதரவாக செயற்படுவது என்பதன் அர்த்தம் திருப்திப்படுத்துவதற்காக நடவடிக்கைகளை எடுப்பது எங்கள் தோற்றத்தை சிறப்பாக வைத்திருப்பது என்பதல்ல- அது எங்களால் முடிந்த மிகச்சிறப்பான உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பானது.இதனை பிரதிபலிக்கும் கொள்கையை நிறுவனங்கள் பின்பற்றவேண்டும்.

நான் கர்ப்பிணியாகயிருந்தபோதும் பின்னர் எனது மகன் பிறந்தவேளையிலும் எனது நிறுவனத்தின் ஆதரவான கொள்கைகள் காரணமாக என்னால் வீட்டிலிருந்து பணியாற்ற முடிந்தது – நேரங்கள் தொடர்பிலும் நெகிழ்ச்சிப்போக்கு காணப்பட்டது. எனது கணவரும் தொழில்புரிகின்றார்-இதன் மற்றைய பக்கம் அது.
வீட்டையும் கவனித்து பிள்ளையையும் பராமரிக்கவேண்டிய நிலையில் உள்ள பெண்கள் மிகுந்த நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.நாங்கள் திருமணம் செய்தவேளை சுரேனும் நானும் வீட்டுவேளைகளை 50-50 என்ற அடிப்படையில் பிரித்துக்கொள்வது என தீர்மானித்தோம்.அதன் பின்னர் எங்கள் மகன் பிறந்தவேளை பிள்ளையை பராமரிப்பதையும் 50-50 என பிரித்துக்கொண்டோம்.பொறுப்புகளை பரிமாறிக்கொள்வது எங்களிற்கு பழக்கமாகி விட்டது.எங்கள் திருமணத்தில் நாங்கள் இருவரும் சமமானவர்கள், எங்கள் தொழில்வாழ்க்கையும் சமமான முக்கியத்துவத்தை கொண்டது.நாங்கள் ஏனையவற்றிற்கு புறக்கணித்து விட்டு மற்றொன்றிற்கு முன்னுரிமை அளிப்பதில்லை.

எனது மகன் இதுபோன்ற சமத்துவமான திருமணங்கள் வழமையான விடயம் என்ற சிந்தனையுடன் வளருவான் என்பது குறித்து நான் மகி;ழ்ச்சியடைந்துள்ளேன்.நானும் இவ்வாறே வளர்க்கப்பட்டேன். எனது குடும்பத்தில் எனது பெற்றோர்கள் இருவரும் தொழில்புரிந்தனர் இருவரினது தொழிலும் சமமுக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்பட்டது.என்னையும் எனது சகோதரனையும் எங்களிற்கு பிடித்த விடயங்களை பின்பற்றுவதற்கு அனுமதியளித்தனர்.நான் பெண் என்பதால்  ஓரு விடயத்தை செய்ய முடியாது என என் பெற்றோர் ஓருபோதும் தெரிவி;த்ததில்லை.கணிதம் படித்ததால் எனது ஆசிரியைகள்  அனேகமாக பெண்களாக காணப்பட்டனர்.அவர்கள் என்னை ஸ்டெம் பாடங்களை கற்குமாறு ஊக்குவித்தனர். பொறியிலாளராக வரவேண்டும் என எனக்கு எவரும் அழுத்தம் கொடுத்ததில்லை வற்புறுத்தியதில்லை.அவர்கள் தடைகள் எதனையும் விதிக்காததே போதுமான விடயம்.

பெண்களின் தொழில்கள் குறித்த சிந்தனையில் உண்மையான மாற்றம் அவசியம்.நாங்கள் எங்கள் பெண் பிள்ளைகளிற்கு அவர்கள் விரும்பும் எந்த துறையையும் தெரிவு செய்யலாம் என்பதை  வீட்டிலேயே சொல்லிக்கொடுக்கலாம்.குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் விடயத்தில் தாய் தந்தையர் இருவரும் சமமான பங்களிப்பை வழங்குபவர்களாகயிருக்கலாம் என்பதையும் கற்றுகொடுக்கலாம்.அனைவருக்கும் பாதுகாப்பான ஆதரவான பணிபுரியும் சூழல் அவசியம் என்பதை அங்கீகரிப்பதன் மூலம் அலுவலகங்களிலும் நாங்கள் இதனை தொடரலாம்.இந்த உரிமைகளை  உத்தரவாதப்படுத்தும் கொள்கைகள் மூலம் தேசிய அளவில் இதனை நடைமுறைப்படுத்தலாம்.
 
அதன் பின்னர் பெண்கள் என்ற அடிப்படையில் நாங்கள் துணிச்சலானவர்களாவும் உறுதியானவர்களாகவும் விளங்கலாம்.நான் சர்வதேச தொழில்நுட்ப மாநாடுகளில் அடிக்கடி எனது நிறுவனத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றேன்.அந்த மாநாடுகளின்  பார்வையாளர்கள் அனேகமாக பெருமளவிற்கு ஆண்களாக காணப்படுவார்கள்,ஆனால் நான் உரையாற்றும்போது அது பெண் முக்கியம் பெறுவதாக மாறிவிடும்,நான் என்னை முன்னிறுத்தி தனித்துவமாக தோற்றமளிப்பதை விரும்புகின்றேன்,இது எனக்கு உந்துசக்தியை வழங்குகின்றது,அது என்னை மேலும் கடினமாக பணியாற்றுவதற்கும் எனக்கான விடயத்தை நான் அறிந்துகொள்வதற்கும் தூண்டுகின்றது.பெண்கள் ஆண்களை விட பின்னோக்கி செல்லவேண்டியதில்லை.எங்கள் மீது  எங்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது எப்படி  என்பதை நாங்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.

செசிகா பெர்ணோன்டோ நிதி மற்றும் கணணிதுறையை சார்ந்தவர்.டபில்யூ எஸ் ஓ2 ஸ்ரீலங்கா என்ற நிறுவனத்தின் நிதிதீர்வுகள் தொடர்பான பிரிவின் தலைவராக பணியாற்றுகின்றார்.


Authors

Seshika Fernando

Seshika Fernando - Associate Director - Financial Solutions at WSO2.

Join the Conversation

The content of this field is kept private and will not be shown publicly
Remaining characters: 1000