இலங்கையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பதற்கான காலம் இது!

|

This page in:

 

Starting today, March 8, we at the World Bank are embarking on a year-long effort to rally the government, our development partners, the private sector and the public to see how we can really deliver results for Sri Lanka’s women.
இன்று மார்ச் 8ம் திகதி தொடக்கம் உலக வங்கியைச் சேர்ந்த நாம் ஆரம்பித்துள்ள இந்த வேலைத்திட்டத்தினூடாக  நாட்டின் அரசாங்கம், அபிவிருத்திப் பங்காளர்கள், தனியார் துறையினர் மற்றும் பொதுமக்களையும் இணைத்துக் கொண்டு எங்ஙனம் இலங்கைப் பெண்களின் நிலையை முன்னேற்றும் விடயத்தில் சாதகமான பெறுபேறுகளை உண்மையாகவே அடையமுடியும் எனப் பார்க்கின்றோம்.

சர்வதேசப் பெண்கள் தினம் ,எனது நாட்காட்டியில் எப்போதுமே முக்கியத்துவம் மிகுந்த நாளாகும். அந்தவகையில் 'முன்னேற்றத்திற்காக பணியாற்றுவோம்' #PressForProgress என்ற இவ்வருடத்திற்கான தொனிப்பொருள் பெரும் உற்சாகத்தைத் தருவதாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.
 
இன்று மார்ச் 8ம் திகதி தொடக்கம் உலக வங்கியைச் சேர்ந்த நாம் ஆரம்பித்துள்ள இந்த வேலைத்திட்டத்தினூடாக  நாட்டின் அரசாங்கம், அபிவிருத்திப் பங்காளர்கள், தனியார் துறையினர் மற்றும் பொதுமக்களையும் இணைத்துக் கொண்டு எங்ஙனம் இலங்கைப் பெண்களின் நிலையை முன்னேற்றும் விடயத்தில் சாதகமான பெறுபேறுகளை உண்மையாகவே அடையமுடியும் எனப் பார்க்கின்றோம்.
 
ஏன் இந்த அவசரம்
 
எளிமையாகக் கூறுவதென்றால், தொழில்புரியும் பெண்களைப் பொறுத்தமட்டில் இலங்கை அதனையொத்த அபிவிருத்தி வீச்சிற்குள் இருக்கின்ற பல நாடுகளுடன் நோக்குகையில்  பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. இலங்கையிலுள்ள 15 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் 214, 298 பெண்கள் தொழிலற்றவர்களாக இருக்கின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? 
 
இலங்கையின் தொழிற்படையில் பெண்களின் பங்கேற்பு வீதமானது கடந்த இருதசாப்தங்களில் 30களின் மத்தியிலேயே முன்னேற்றமின்றிக் காணப்படுகின்றது.  பொருளாதார ரீதியாக வினைத்திறன் அற்றவர்கள் எனக் கருதப்படுபவர்களாக கணிப்பிடப்பட்டுள்ள 7.3 மில்லியன் மக்களில் 73.8 சதவீதமானவர்கள் பெண்களாக காணப்படும் அதேவேளை ஆண்களின் எண்ணிக்கை 26.2 சதவீதமாகக் காணப்படுகின்றது.  

இந்தச் சவாலை எதிர்கொள்வதென்பது எந்தவொரு தனி அமைச்சினாலோ அன்றேல் அபிவிருத்திப் பங்காளாராலோ  மாத்திரம் சாத்தியப்படக்கூடியதல்ல என்பது தெளிவாகின்றது. 
 
இலங்கைப் பெண்கள் தொழிலில் ஈடுபடவேண்டிய அவசியமென்ன?
 
ஏனெனில் இந்த நாட்டின் சுபீட்சமானது அதில் தங்கியுள்ளது! இலங்கை செல்வந்த நாடாக முன்னர் வயது முதிர்ந்தோரைக் கொண்ட நாடாக மாறிக்கொண்டிருக்கின்றது. தொழிலாளர் படை இல்லாவிடின் நாடு ஏனைய நாடுகளுடன் போட்டிபோடும் தன்மையைக் கொண்டிருக்கவோ அன்றேல் வருமானத்தை ஈட்டுவதற்கு அவசியமான அடிப்படைச் சேவைகளை வழங்குவதற்கோ முடியாது. 
 
ஆகவே, இலங்கைப் பெண்களைப் பொறுத்தவரையில் உண்மையில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு செய்யவேண்டிய விடயங்கள் என்ன ? என்பதே கேள்வியாகும்.  பெண்களுக்கு நன்மையளிக்கக் கூடிய மாற்றத்தைக் கொண்டுவரக்கூடியவர்களை ஊக்குவிப்பதற்கு  நாம் எப்படி உதவமுடியும்.
 
அடிமட்டத்தில் காணப்படுகின்ற யதார்த்தைத் உணர்ந்து அதுதொடர்பில் தீர்வுகளைத் தேடும் உறுதியான முன்முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக உலக வங்கியானது ,அரசாங்கம் ,தனியார் துறை ,அபிவிருத்திப் பங்காளர்கள் மற்றும் இலங்கைப் பிரஜைகளுடன் இணைந்துகொள்ளத் தயாராகவுள்ளது.  இந்த விடயத்திற்கு ஆதரவாக நாம் பரந்தளவில் குரல்கொடுக்கவுள்ளோம்.
 
ஆகவே, சில முக்கியமான அறிவித்தல்களுடன் ஆரம்பிப்போம். நாங்கள் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புகின்றோம். நாங்கள் எங்கே ஆரம்பிக்க வேண்டும் என்றும் எந்தவிடயங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்றும் கூறுங்கள். உங்களுடைய சவால்கள் என்ன எனவும் உங்களை அதிகமாக ஊக்குவிப்பவர் யார் என்பதையும் நாம் அறிந்துகொள்ள விரும்புகின்றோம். 
 
மூன்று வழிகளில் நீங்கள் சம்பந்தப்படவும் முன்னேற்றத்திற்காக பணியாற்றவும் முடியும்
 

  1.  எமது ஆய்வுக் கேள்விகளுக்கு பதில்களை வழங்கி எம்மோடு உங்கள் கதையைப் பகிர்ந்து கொள்ளுதல். பத்துக் கேள்விகளை மாத்திரமே உள்ளடக்கியுள்ள இந்த ஆய்வில் பெண்களும் ஆண்களும் பங்கேற்க முடியும்.  அபிவிருத்தி என்பது ஒரு கூட்டுச்செயற்பாடாகும். அந்தவகையில் இதற்கு ஆதரவாக   குரல்கொடுக்கவும் செயற்படவும எமது ஆண் சகாக்கள் உதவ முன்வரவேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். பெண்கள் எங்ஙனம் தொழிலுக்கு செல்லமுடியும் என்பது தொடர்பாக கொள்கை வகுப்பாளர்களுக்கு அறியத்தருவதற்கும் அரச மற்றும் தனியார் துறையினர் மத்தியில் கலந்துரையாடல்களை ஊக்குவிப்பதற்கும்  உங்களுடைய பதில்கள் பயன்படுத்தப்படும்.
     
  2. வென்றாக வேண்டும் என்ற தனிப்பட்டவர்களின் உள்ளார்ந்த விரும்பத்திலும் தமக்கு முன்னுதாரணமாக திகழ்பவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதிலுமே வெற்றியென்பது அதிகமாகத் தங்கியுள்ளது. 'உங்களது முன்னுதாரணத்திற்குரிய பெண் யார்? ' என்ற எமது புகைப்பட போட்டி நிகழ்ச்சிக்கு உங்களுக்கு பெண்களில் முன்னுதாரணமாக திகழ்பவரது புகைப்படத்தையும் அவர் ஏன் உங்கள் பணியை சிறப்பாக செய்ய ஊக்குவிப்பாக விளங்குகின்றார் என்பதை சிலவரிகளிலும் எழுதி எமக்கு அனுப்பி வையுங்கள்.
     
  3. இறுதியாக உங்களிடமிருந்து நாம் அறிந்துகொள்வதற்கு ஆசைப்படுகின்றோம். எமது வருகைதரு பதிவர்களில் ஒருவராக உங்களது கருத்துக்களை  [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களுடைய சுயவிபர சுருக்கக்குறிப்பை அனுப்பமறக்கவேண்டாம். உண்மையைக் கூறுவதெனில் எமது அடுத்த வருகைதரு பதிவர் ஷேஷிகா பெர்ணான்டோ தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த பெண் என்ற வகையில் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவுள்ளார். பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய ஒரு அணியானது எவ்வாறு  உலகத்தரம்வாய்ந்த உற்பத்திப்பொருளை தயாரிப்பதற்கு வழிகோலுகின்றது என்ற விடயத்தை அவர் விசேடமாக பகிர்ந்துகொள்ளவுள்ளார்.

 
தயவு செய்து பங்குபற்றுங்கள். அத்தோடு இந்தவிடயத்தில் பங்களிக்கக்கூடியவர்கள் என நீங்கள் நினைப்பவர்களுடன் பரந்தளவில் பகிர்ந்துகொள்ளுங்கள். ஒருங்கிணைந்தவகையில் மாபெரும் ஊந்துதலுடன் நாம் இணைந்து பணியாற்றுவதன் மூலம் மாத்திரமே தொழிலாளர் படையில் பெண்களின் பங்கேற்பை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்லுதல் சாத்தியமாகும். 
 
இந்த விடயத்தில் நீங்கள் கரிசனைக்குரியவராக இருப்பின் பாதுகாப்பானதும் ,நியாயமானதும் ,கொடுப்பனவு வழங்கப்படுகின்றதுமான தொழில்களில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதை அடுத்தடுத்து ஆட்சிபீடமேறிய இலங்கை அரசாங்கங்கள் ஏற்று அங்கிகரித்தன என்பதை மனதிற்கொள்ளுங்கள். உலக வங்கி உட்பட பல அபிவிருத்திப் பங்காளர்கள் இந்தத்திட்டத்தில் முதலிட்டுள்ளன.   பல்வேறு அறிக்கைகளின்  several reports  பலனாக நாம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான உணர்வைக் கொண்டிருக்கின்றோம். 
 
பெண்கள் தொழிலாளர் சந்தையில் பிரவேசிப்பதற்கு அன்றேல் தொடர்ந்தும் நிலைத்திருப்பதற்கு பாதகமாக விளங்குகின்றதான, காலங்கடந்த தற்காலத்திற்கு பொருந்தாத சட்டங்களையும் கொள்கைகளையும் இலங்கை மாற்றியமைக்கவேண்டும். விஞ்ஞானம் ,கணிதம் போன்ற பாடங்களில் இளம் பெண்கள் ஆர்வம் கொள்ளத்தக்க வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். ஆண்களைப் போன்று அவர்களாலும் சாதிக்கும் திறனுள்ளது என்பதையும் பொறியியல் , விஞ்ஞான ஆய்வு மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறைகளில் பெண்களாலும் தொழில்சார் வாழ்க்கையை கட்டியெழுப்புவது சாத்தியமென்பதையும் உணரவைக்கவேண்டும். 
 
வேலைத்தளங்களில் பல்வகைமையை ஆதரிப்பதாக அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் தொழில்தருநர்கள், தாம் கூறுகின்ற விடயங்களை செயலில் காண்பிக்க வேண்டும். இந்த வகையில் தொழில்களுக்கு பெண்களையும் வேலைக்கு அமர்த்துதல், ஒரே வகையான வேலைகளைச் செய்யும்போது ஆண்களுக்கு நிகரான ஊதியத்தை பெண்களுக்கு வழங்குதல் ஆகியவற்றை உறுதிசெய்யவேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து அவசியமாகின்றதுடன் வேலைத்தளங்களில் பாலியல் துன்புறத்தல்களை எந்தளவிலும் சகித்துக்கொள்ளாத சூழ்நிலை காணப்படுவதை உறுதிசெய்யவேண்டும்.  இளம் பிள்ளைகளைக் கொண்டிருக்கின்ற பெண்கள் தொழில்களுக்கு செல்வதற்கு தீர்மானித்தால், அவர்கள் தொழிலில் ஈடுபடுவதற்கு உயர் தராதரமுடைய சிறுவர் பராமரிப்புச் சேவையானது கொடுக்கும்.
 
இல்லங்களில் தமது இளம்பெண்களை எதிர்காலத்தின் சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய தொழில்வாண்மைமிக்கவர்களாக பார்க்கக்கூடிய குடும்பங்கள் அவசியமாகும்.  குடும்பப்பொறுப்புக்களை ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமமான அளவில் பகிர்ந்துகொள்ள முடியும். 
 
இறுதியாக ஒருவிடயத்தை கூறுவதெனில் ,சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் பெண்கள் தாம் விரும்புகின்ற மாற்றத்தை தாமே முன்கொண்டுவருவதற்கான வலுவுள்ளவர்களாக திகழ்கின்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது.  ஆண்களாக இருப்பினும் பெண்களாக இருப்பினும் பெண்களின் வழிகாட்டிகளாக திகழ்பவர்கள் தமது வேலைத்தளங்களில் பெண்கள் தமது முழுமையான ஆற்றலை வெளிக்கொணர்ந்து தொழில்வாண்மைமிக்கவர்களாக உயர்வடைவதற்கு ஊக்கிகளாக திகழவேண்டும். ' 'முன்னேற்றத்திற்காக பணியாற்றுவோம்' என்ற தொனிப்பொருளுடன் உடன்படுகின்றவர்களின் மனதிலும் இதே எண்ணம் குடிகொண்டிருக்கும் என நான் நிச்சயமாக நம்புகின்றேன்.தனிப்பட்ட ரீதியில், பல்வேறு பங்களிப்புக்கள் மூலமாக நான் வருடமுழுவதுமாக தொழிலாளர் படையில் பெண்களின் அதிகரித்த பங்கேற்பிற்கு ஆதரவாக நான் குரல்கொடுக்கவுள்ளேன்.  என்னுடன் நீங்களும் நிச்சயமாக இணைந்துகொள்ளமுடியும் இணைந்துகொள்வீர்கள் என நான் நம்புகின்றேன். 
 

Authors

Idah Z. Pswarayi-Riddihough

Country Director, Mozambique, Madagascar, Mauritius, Comoros and Seychelles

Join the Conversation